சிறார் இலக்கிய உலகில் தனித்துவம் மிக்க எழுத்தாளர் விழியன் அவர்கள் எழுதிய மூன்று முக்கிய நூல்கள் தற்போது பிரெய்லி எழுத்து வடிவில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அவை:
- சகி வளர்த்த ஓகி
- கடல்ல்ல்ல்ல் (காட்டு நண்பர்களின் கடல் நோக்கிய பயணம்)
- பென்சில்களின் அட்டகாசம்
பார்வை மாற்றுத்திறனாளிகளும் இந்தக் கதைகளை வாசித்து மகிழும் பொருட்டு, சென்னையின் NIEPVD-RC மையத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் மு.ரேவதி அவர்கள் இவற்றை பிரெய்லி வடிவில் தயாரித்துள்ளார்.